2026 மே 14, வியாழக்கிழமை

dd

உயர்தரத்தை யாழில் தொடரும் ஊவா மாணவர்கள்

Gavitha   / 2015 ஜூன் 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கர்ணன்

பதுளை மாவட்டத்தில் உயர்தர வகுப்பை தொடரமுடியாமல் இருந்த 11 மாணவர்கள், யாழ்ப்பாணத்தில் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை அகில இலங்கை சைவ மகா சபை மற்றும் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம் ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ளன.

பதுளை, பண்டாரவளை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் உயர்தரத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவுகளை தெரிவு செய்தும் கல்வி கற்பதற்காக சூழல் மற்றும் வசதிகள் இல்லாத 11 மாணவர்கள், கல்விப் பணிமனையினூடாக இனங்காணப்பட்டதுடன்; யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டு, கொக்குவில் இந்துக் கல்லூரியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

கணிதப் பிரிவில் 6 மாணவர்களும்  விஞ்ஞானப் பிரிவில் 5 மாணவர்களும் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தங்குமிடம், உணவு, பாடசாலை தேவைகள் உள்ளிட்ட அனைத்தையும் அகில இலங்கை சைவ மகா சபை மற்றும் தொண்டைமானாறு சந்நிதியான் ஆகியன மேற்கொள்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .