Gavitha / 2015 ஜூன் 25 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
420 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை முச்சக்கரவண்டிக்கு வைத்திருந்த மூன்று இளைஞர்களை அலவத்துகொடை பொலிஸார் நேற்று புதன்கிழமை (24) கைது செய்துள்ளனர்.
அக்குறணை நகரில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் சாரதியிடம் இந்த போதைப்பொருட்கள் இருந்ததாகவும் முச்சக்கரவண்டிக்குள் இருந்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி சாரதிக்கு, கொழும்பிலிருந்து ஒருவர் ஹெரோய்ன் போதைப்பொருளை கொண்டு வந்து கொடுப்பதாகவும் அவர் தனது நண்பர்கள் உட்பட்ட ஏனைய இளைஞர்களுக்கும் இதனை வினியோகித்து வருவதாகவும் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதியை, கண்டி பிரதான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும்; பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago