Kogilavani / 2015 ஜூன் 26 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
கையடக்கத்தொலைபேசி விற்பனையாளர் ஒருவரை ஏமாற்றி 15 கையடக்கத்தொலைபேசிகளை பெற்றுச்சென்ற நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ஹட்டன் பிரதான நகரம், மணிகூட்டு கோபுரத்துக்கு அருகிலுள்ள கையடக்கத்தொலைபேசி விற்பனை நிலையத்துக்கு சென்ற நபரொருவர் அங்கு பணிபுரியும் ஊழியரிடம் தான் நுவரெலியா வைத்தியசாலையில் தொழில் புரிவதாகவும் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு 15 கையடக்க தொலைபேசிகள் வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
அதன்பின் 15 கையடக்க தொலைபேசிகளையும் நுவரெலியா வைத்தியசாலைக்கு நாளை (24) காலை எடுத்துவருமாறு கூறிச்சென்றுள்ளார்.
சம்மந்தப்பட்ட கடை ஊழியர் சந்தேக நபரின் வாக்குறுதியை நம்பி 15 கையடக்க தொலைபேசியுடன் புதன்கிழமை(24) நுவரெலியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
கடை ஊழியர் சம்மந்தப்பட்ட நபருடன் கலந்துரையாடிய பின்னர் தொலைபேசி அனைத்தையும் பெற்றுக்கொண்டதுடன் அதற்கான ஒப்பந்த படிவத்தில் கையொப்பம் இட வேண்டுனெகூறி முத்திரைகளை பெற்று வருமாறு ஊழியரிடம் தெரிவித்துள்ளார்.
முத்திரை வாங்குவதற்காக கடை ஊழியர் கடைக்கு சென்ற போது சந்தேக நபர் 15 தொலைபேசிளுடன் தலைமறைவாகியுள்ளார்.
கடை ஊழியர் சந்தேக நபரை தொலைபேசியுடன் தொடர்பு கொண்டபோது தான் வைத்தியசாலை காரியாலயத்தில் உள்ளே இருப்பதாக தெரிவித்துள்ளதுடன் சில நிமிடங்களில் தொலைபேசியை நிறுத்தி வைத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர், வைத்தியசாலைக்கு சென்று இது தொடர்பாக வைத்தியர்களிடம் கேட்டபோது, தாங்கள் கையடக்க தொலைபேசி கேட்கவில்லையெனவும் இவ்வாறான ஒருவர் எமது வைத்தியசாலையில் தொழில் புரியவில்லையெனவும் வைத்தியர்கள் பதிலளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர், இச்சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ரூபாய், 180000 பெறுமதியான கையடக்கத்தொலைபேசிகளே கடை ஊழியர் மேலும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago