Sudharshini / 2015 ஜூன் 28 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூண்டுலோயா பொலிஸ் நிலையத்தில் கடந்த 5 வருடமாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த ரீ.கலுகம்பிட்டியவின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி பூண்டுலோயா பிரதேசவாரிகள் ஒன்றிணைந்து வெள்ளிக்கிழமை (26) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இதன்போது பூண்டுலோக நகரத்திலுள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டகார்கள் ஊர்வலமாக பதாதைகளை ஏந்தியவாறு பூண்டுலோயா பொலிஸ் நிலையத்துக்கு சென்று, தற்போது பொலிஸ் நிலையத்தின் தற்காலிக பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
மேற்படி பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதேசத்தில் மூவின மக்களும் சமாதானத்துடன் வாழ்வதற்கும் சட்ட விரோத செயல்பாடுகள் நடைபெறாமல் இருப்பதற்கும் காரணமாய் இருந்துள்ளார். எனவே, இவரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago