2026 மே 14, வியாழக்கிழமை

dd

சிறுவர்களுக்கு அறநெறிக் கல்வி இன்றியமையாதது: ஸ்ரீதரன்

Kogilavani   / 2015 ஜூன் 28 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்கும்  சமூக விழுமியங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் அறநெறிக்கல்வி இன்றியமையதாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரத்தின் நிதியொதுக்கீட்டில் வட்டவளை, ரொசல்ல கிராமத்தில் அமைக்கப்படவுள்ள அறநெறி பாடசாலை கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் வட்டவளை அமைப்பாளர் சங்கரலிங்கம், இணைப்பாளர் சசிக்கலா, சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'ரொசல்ல கிராமத்திலுள்ள அறநெறிப்பாடசாலை பலவருடங்களாக எவ்விதமான கட்டட வசதிகளுமின்றி இயங்கி வருகின்றது.

இந்தப்பாடசாலையில் ரொசல்ல பகுதியைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விக்கற்கின்றனர். இந்த மாணவர்களின் நிலையை கருத்தில்கொண்டு நிரந்திர கட்டடமொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் 10 இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு செயதுள்ளார்.

மேலும் வட்டவளை சிங்கள பாடசாலைக்குச் செல்கின்ற தமிழ், சிங்கள மாணவர்களின் நலன் கருதி இந்தப் பாடசாலையின் விளையாட்டு மைதானம் 5 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பின்னோயா தோட்டக் குடியிருப்புப் பாதையை செப்பனிடுவதற்கு 5 இலட்சம் ரூபாயும் கரோலினா தோட்ட குடிநீர் விநியோகத்துக்கு  5 இலட்சம் ரூபாயும் லொனெக் தோட்டத்தின் குடிநீர்  விநியோகத்துக்கு 2 இலட்சம் ரூபாயும்  தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வட்டவளை நகரிலிருந்து லொனெக் தோட்டத்துக்கு செல்லும் பாதையைச் செப்பனிடுவதற்கு அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார்.   எதிர்காலத்தில் வட்டவளை பிரதேசத்தில் பல்வேறு  அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .