Kogilavani / 2015 ஜூன் 28 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியின் கீழ் போட்டியிடுவதா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான முத்து சிவலிங்கம் தெரிவிததார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொட்டகலை, சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறான நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸானதுசில இடங்களில் தனித்தும், சில இடங்களில் கூட்டணியின் கீழ் போட்டியிடவும் தீர்மானித்துள்ளது.
எனினும் இதுகுறித்த இறுதி தீர்மானம் இதுவரையில் எட்டப்படவில்லை. விரைவில் இது குறித்த தீர்மானம் எட்டப்படும். மலையக மக்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் கட்சிகளுடனேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும்.
இதுதொடர்பில் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago