Sudharshini / 2015 ஜூன் 29 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா,ஆர். கோகுலன்
ஆசிரிய உதவியாளர்களை குறைத்து மதிப்பிடவேண்டாம். வெகுவிரைவில் உதவியாளர்கள் என்ற பதம் நீக்கப்பட்டு ஏனைய ஆசிரியர்கள் போன்று அவர்களும் கடமையாற்ற கூடிய சூழல் ஏற்படும். ஆகவே, இவ்வாசிரியர்கள் அனைவரும் சமூக அர்ப்பணிப்புடனும் உணர்வுபூர்வமாகவும் கடமையாற்ற வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன் என ஊவா மாகாண கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
ஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் கடமையாற்றுவதற்காக 81 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 599 ஆசிரிய உதவியாளர்களுக்கும் நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷின் தலைமையில் இன்று (29) பதுளை நூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. அங்கு அவர் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
நான் பதவியேற்ற குறைந்த நாட்களிலே கூடுதலான ஆசியர் நியமனங்களை வழங்கியுள்ளேன். கடந்த முறை 53 தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. இன்று பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய உதவியாளர்கள் 680 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நியமனங்கள் மூலம் அதிகளவில் ஆசியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும். ஆனாலும் கணிதம் விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரிய பற்றாக்குறை இருந்து வருகின்றது. இதனை நிவர்த்தி செய்ய வெளி மாவட்டங்களிலிருந்து பாட ரீதியான ஆசிரியர்களை ஒப்பந்த ரீதியில் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.' என்றார்.
இந்நிகழ்வில் மாகாண அமைச்சர் ஆனந்த குமாரசிரி மற்றும் ஊவா மாகாண சபை உறுப்பினர்களான ஜயந்த கன்னங்கர, ஆர்.எம் ரட்ணாயக முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் அ.அரவிந்தகுமார் உள்ளிட்டு மாகாண கல்வி பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago