Administrator / 2015 ஜூன் 30 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரலவின் பிரதான ஆதரவாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளான நிலையில் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்வம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி, தேல, ஹெரகல்லேவத்த எனுமிடத்தில் நடைபெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான துஷார தேவாலேகம என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
இவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின் இடம்பெற்ற முதலாவது தேர்தல் கொலை இதுவாகும் என தேர்தலுக்கான கண்கானிப்பு இயக்கமான கபே அறிவித்துள்ளது.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago