2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மாத்தளையில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

Administrator   / 2015 ஜூலை 01 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சி.எம்.ரிஃபாத்

மாத்தளையில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக மாத்தளை பொது சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களில் 40 பேர் டெங்கு நோயாளர்களாக இருக்கலாமென  சந்தேகிக்கப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

உக்குவலை, மாத்தளை விகாரை வீதி, யட்டவத்த போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்களே டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த 6 மாதங்களில் பொது சுகாதார சேவை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளின் போது, டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை அசுத்தமாக வைத்திருந்த 80 குடியிருப்பாளர்களை இனங்காணப்பட்டதாகவும்து அவர்களுக்கு எதிராக நீதிமன்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X