Kogilavani / 2015 ஜூலை 01 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் ஆஸிக்
கண்டி மாவட்டத்தை சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சி தொகுதி அமைப்பாளர்; சிலருக்கு இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கட்சியின் உயர்மட்ட அங்கத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
கண்டி மாவட்டத்தில் 13 தேர்தல் தொகுதிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி தனது அமைப்பாளர்களை நியமித்துள்ளதுடன் அவர்கள் அனைவருக்கும் வேட்பு மனு வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி மாவட்டத்துக்கு 12 உறுப்பினர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுவதுடன் 15 வேட்பாளர்களுக்கு மட்டுமே வேற்பு மனு வழங்க முடியும் என்றும் கட்சியுடன் கூட்டுச் சேரும் சிறு கட்சிகளுக்கும் சிறுபான்மையினருக்கும் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்க நேர்ந்துள்ளதால் இவ்வாறு கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலருக்கு போட்டியிடும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போகலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இருந்தபோதும் கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்த தொகுதி அமைப்பாளர்களுக்கு இதனால் எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் ஒரு திட்டம் வகுக்கப்படும் என்றும் கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago