Kogilavani / 2015 ஜூலை 01 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின்பெர்ணான்டோவுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோடு ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை ஈடுபடவுள்ளதாக ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றிருக்கும் 22 கம்பனிகளின் நிறைவேற்று முகாமைத்துவ பணிப்பாளர்களையும் இதில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஊவா மாகாண முதலமைச்சர் அலுவலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை(1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள வழங்க வேண்டும். கூட்டுஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் தோல்வியிலேயே நிறைவுற்றுள்ளன.
தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பிரதான தொழிற்சங்கம் தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றிக்கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது.
எனவே, மாகாண முதலமைச்சருடன் பிரதமரை சந்தித்து சம்பள உயர்வு குறித்து பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
இப்பேச்சு வார்த்தையில் தோட்டங்களை பொறுப்பேற்றிருக்கும் 22 கம்பனிகளின் நிறைவேற்று பணிப்பாளர்களையும் இணைத்துக்கொள்ளவுள்ளேன்.
இதன்மூலம் தோட்ட தொழிலாளர்களுக்கு நிச்சயமாக சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியுமென்று எதிர்பார்க்கின்றேன்.
ஊவா மாகாணத்தில் இல்லாது போயிருந்த தமிழ்க்கல்வி அமைச்சை எமக்கு பெற்றுக்கொடுத்து எமது சமூகத்துக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுத்தவர் எமது முதலமைச்சர்.
அவர், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுவதால் அவரை அமோக விருப்பு வாக்குகளுடன் வெற்றிப்பெற வைக்க வேண்டிய தார்மிக கடமை எமக்குள்ளது.
பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை தேர்தல் தொகுதியை தவிர்த்து ஏனைய 8 தொகுதிகளிலும் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிப்பெறுவது தின்னம். குறிப்பிட்ட 8 தொகுதிகளிலும் கனிஷமான தமிழ்பேசும் மக்கள் இருந்து வருவதே மேற்படி வெற்றிக்கான காரணமாகும்.
ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சை பொறுப்பேற்ற இக்குறுகிய காலத்தில் 732 பேருக்கு ஆசிரிய நியமனங்களை வழங்கியுள்ளேன். மாகாணத்தின் 203 பாடசாலைகளில் நிலவிய தளபாட பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு 11.7 மில்லியன் ரூபாயை செலவு செய்துள்ளேன்.
இந்நிதி மாகாண சபையினால் எமது முதலமைச்சரின் வெளிநாட்டு பிரயாணத்துக்கென ஒதுக்கப்படடிருந்தது. எனது கோரிக்கைக்கமைய அந்நிதியை மாகாண தமிழ் கல்வி அமைச்சுக்கு முதலமைச்சர் வழங்கியிருந்தார்.
ஆசிரியர் உதவியாளருக்கென்று ஆறாயிரம் ரூபாய் அடிப்படையில் சம்பளம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
அந்நிலையை போக்கி அவர்களுக்கு 235,00ரூபாய் சம்பளத்தை பெற்றுக்ககொடுக்க நான் ஏற்பாடு செய்திருக்கின்றேன். இச்செயற்பாடானது ஊவா மாகாணத்தில் என்னால் பெற்றுக்கொடுக்க முடிந்த சாதனையாகும். இதனை பின்பற்றி ஏனைய மாகாணங்களில் நியமனங்களைப்பெற்ற ஆசிரிய உதவியாளர்களும் இந்நடைமுறையை பேனவேண்டும்.
சேவல் சின்னத்திலிருந்து நான் விலகினேனேன்றி ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்திலிருந்து நான் விலகவில்லை. இக்கட்சியே எனது தாய்வீடாகும். அத்தாய் வீட்டிலிருந்து சேவையாற்றவது எனக்கு பெருமையளிக்கிறது' என்றார்.
29 minute ago
3 hours ago
3 hours ago
menan boos Thursday, 02 July 2015 01:17 AM
Lie
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
3 hours ago