Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 ஜூலை 02 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் திகாம்பரத்தின் ஆலோசனைக்கு ஏற்ப தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் மூலமாக வட்டவளை பிரதேசத்திலுள்ள தோட்டங்கள் பலவற்றில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பழனி திகாம்பரம் பதவியேற்ற குறுகிய காலத்தில் தோட்டப்பகுதிகளில் எவ்விதமான பாரபட்சமுமின்றி அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் வட்டவளை பிரதேசத்தில் பாதைகள் செப்பனிடல், மைதான புனரமைப்பு, குடிநீர் விநியோகம், அறநெறி பாடசாலை அமைத்தல் போன்ற அபிவிருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வட்டவளை பிரதேசத்தைப் பொறுத்தவரையில் தொழிலாளர் தேசிய சங்கத்துக்கான ஆதரவு தற்போது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு முன்னணி சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களை வெற்றிப் பெறச்செய்வதற்கு வட்டவளை பிரதேச மக்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிலவற்றுக்கு தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வீடமைப்பு பணிகள் பூர்;த்தியடையும் நிலையிலுள்ளன.
தோட்ட பகுதிகளில் தொடர்ந்து அபிவிருத்தி நடவடிக்கை முன்னெடுப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் மீண்டும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக செயற்படுவதற்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை எதிர்வரும் பொதுத்தேர்தலில் வழங்க வேண்டும்.
மலையகத் தமிழ் மக்களுக்கு ஏழு பேர்ச்சஸ் நிலம், தனிவீட்டுத்திட்டம் போன்றவற்றைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியை வெற்றிப்பெறச்செய்ய வேண்டும்' என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
1 hours ago