Kogilavani / 2015 ஜூலை 03 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
தனக்கும் மலையக மக்கள் முன்னணியின் ஏனைய உறுப்பினர்களுக்குமிடையில் ஏற்பட்ட கட்சி முரண்பாடுகள் இதுவரை தீர்க்கப்படவில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவி திருமதி. சாந்தினிதேவி சந்திரசேகரன் தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'கட்சியில் இன்னும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. பல்வேறுப்பட்ட சிக்கல்களும் காணப்படுகின்றது. கட்சியில் தற்போது இருக்கின்றவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது. நடைபெறவுள்ள தேர்தலிலும் இவர்களின் செயல்பாடுகள் இவ்வாறு தொடருமாயின் கட்சி பாதிக்கப்படும்.
இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இன்னும் சில பிரச்சினைகள் சரியான முறையில் தீர்க்கப்படவில்லை.
இதனால் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட வண்ணமே உள்ளன.
ஏற்கனவே நடந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாததன் காரணமாக நான் அவர்கள் அழைத்த எந்த கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை' என்றார்.
கல்வி இராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு மறுப்பு
கடந்த காலங்களில் மலையக மக்கள் முன்னணியின் தலைவி திருமதி. சாந்தி சந்திரசேகருடன் சில கருத்து வேறுபாடுகள் காணப்படாலும் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் முழு பங்களிப்பை வழங்குவதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக நேற்று முன்தினம் ஹட்டனில் நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் கூட்டத்தின்போது, முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வி.இரதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இக்கருத்தை, சாந்தினிதேவி சந்தரசேகரன் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago