Kogilavani / 2015 ஜூலை 03 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாண சபையின் சமூக நலன்புரி, நன்னடத்தைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, கிராமிய அபிவிருத்தி மற்றும் கிராமிய கைத்தொழில் அமைச்சின் மூலம் ஐம்பது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்; இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 37 சமூக சேவை மன்றங்களுக்கு கூடாரம், சமையல் பாத்திரங்கள், கதிரைகள், தையல் இயந்திரங்கள் என்பன வழங்கப்பட்டன.
மேற்படி பொருட்களை சமூக சேவை மன்றங்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று(3) சப்ரகமுவ மாகாண சபையின் சமூக நலன்புரி, நன்னடத்தைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, கிராமிய அபிவிருத்தி மற்றும் கிராமிய கைத்தொழில் அமைச்சர் ரஞ்ஜித் பண்டார தலைமையில் மேற்படி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இரத்தினபுரி பிரதேச சபையின் உப தலைவர் ஜானக மற்றும் குருவிட்ட பிரதேச சபையின் முன்னால் உறுப்பினாகள் அமைச்சின் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.





7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago