Sudharshini / 2015 ஜூலை 04 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய மட்டுக்கலை தோட்டத்திலுள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஜன்னல் உடைக்கப்பட்டு ஆலயத்தினுள் இருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை (04) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பெரிய மட்டுக்கலை முத்துமாரியம்மன் ஆலயத்தில்; வெள்ளிக்கிழமை (3) இரவு 12 மணிவரை பூஜைகள் நடைப்பெற்றுள்ளன. மேலும், 12 மணிக்கு பின்னரே குருக்கள் ஆலயத்தை மூடிவிட்டு சென்றுள்ளார்.
அதன் பின்னர், இனந்தெரியாத சிலர் ஆலய ஜன்னலை உடைத்து உட்புகுந்து, ஆலய உண்டியலிலுள்ள பணம், அம்மன் கழுத்திலிருந்த தங்க தாலி, டி.வி.டி பிளேயர் போன்ற சில மின் உபகரணங்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவ்வாலயம் அண்மையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago