Kogilavani / 2015 ஜூலை 05 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
வரக்காபொல, கிவுல்தெனிய மற்றும் மல்மடுவ ஆகிய இரண்டு பிரதேசங்களில் 144 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு தாய்சேய் பிணி ஆய்வு நிலையங்கள் வெள்ளிக்கிழமை(3) திறந்து வைக்கப்பட்டது.
இந்நியைங்களை அமைப்பதற்கு தலா 72 இலட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கு தேவையான உபகரணங்களும் பெற்றுகொடுக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் கிவுல்தெனிய, அல்பிட்டிய, வெல்ஹேல்ல, மாயின்கொட்டுவ போன்ற பகுதிகளில் உள்ள 6300 குடும்பங்கள் பயனடைய உள்ளனர்.
மல்மடுவ பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தாய் சேய் ஆய்வு நிலையத்தின் மூலம் மல்மடுவ, பொல்கம்பல, எரமல்தெனிய ஆகிய பகுதிகளில் உள்ள 2300 குடும்பஙகள் பயனடைவர்.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் உதயகாந்த குணதிலக்க மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago