Kogilavani / 2015 ஜூலை 06 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.ஷங்கீதன்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வாக்களிப்பதற்கு காலை வேளையில் விடுமுறை வழங்கப்பட வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நுவரெலியா மாவட்டத்தில் 7 ஆக இருந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் தறபோது 8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அதிகரிக்கப்பட்ட ஒரு ஆசனத்தை சிறுபான்மை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக நாம் எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கும் விகிதாசாரத்தை அதிகரிக்க வேண்டும். எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காலையில் வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்கப்படுமாக இருந்தால் எமது வாக்களிப்பு விகிதாசாரத்தை அதிகரித்துக்கொள்ள முடியும்.
மாலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வாக்களிக்க விடுமுறை வழங்கப்படுகின்ற காரணத்தால் வாக்களிப்பு விகிதாசாரம் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களுக்கு வாக்களிப்பதற்காக காலையில் விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதுதொடர்பாக அனைத்து தொழிற்;சங்கங்களும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும். இந்த தேர்தலில் அனைத்து தொழிலாளர்களும் தங்களுடைய வாக்குகளை தவராமல் பாவித்து எமது சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பாதுகாத்து கொள்வதோடு அதனை அதிகரிக்க தமது வாக்கு பலத்தை பாவிக்க வேண்டும்' என்றார்.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago