Gavitha / 2015 ஜூலை 06 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுபோதையில், சொந்த மகளை தாக்கியது மாத்திரமல்லாது அவர் சுகயீனம் அடைவதற்கு காரணமான மூன்று பிள்ளைகளின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தெனியாயவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமியின் தாய், வீட்டின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். இதனால் மூன்று பிள்ளைகளும் தந்தையின் பராமரிப்பிலேயே இருந்து வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற தினத்தன்று, தந்தை மதுபோதையில் வந்து சிறுமியை தாக்கியுள்ளார். இதனால் சிறுமி சுகயீனம் அடைந்ததுடன் மறுநாள் காலை பாடசாடையில் மயக்கமடைந்துள்ளார்.
பின்னர் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை விசாரணை செய்த மாத்தறை வைத்தியசாலை பொலிஸார் சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago