Gavitha / 2015 ஜூலை 06 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.கோகுலன்
கடந்த சில வாரங்களாக வெலிமடை கெப்பெட்டிபொல சுபத்ரா ராம விகாரையில் இருந்த புராதன பொருட்களை திருடி வந்தவர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெலிமடை நகரில் வியாபார நிலையமொன்றில், விகாரையிலிருந்து திருடப்பட்ட பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை சோதித்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு கடை உரிமையாளர் உட்பட மேலும் இருவரை கைது செய்துள்ளனர்.
இதன்போது காணமற்போன பித்தளையால் செய்யப்பட்ட 4 புத்தர்சிலைகளும் ஒரு சங்கமித்தை சிலை மற்றும் சில பாத்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago