Kogilavani / 2015 ஜூலை 06 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.ஆ.கோகிலவாணி
ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மூன்று மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன்இணைந்தும் மூன்று மாவட்டங்களில் தனித்தும் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், உத்தியோகபூர்வமாக நாளை செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.
அதன் அடிப்படையில் நுவரெலியா. மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்தும் பதுளை, கண்டி மற்றும் கேகாலை ஆகியவற்றில் தனித்து அதன் சேவல் சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago