Kogilavani / 2015 ஜூலை 06 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட தொழிலாளர்களால் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டுவரும் மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தை கைவிடுமாறு இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.வேலாயுதம் கோரியுள்ளார்.
இப்போராட்டமானது நாட்டின் தொழில்துறையை மட்டுமன்றி தொழிலாளர்களையும் பாதிக்குமெனவும் அவர் கோரியுள்ளார்.
இச்செயலை இலங்கை தேயிலை தோட்ட தொழிலாளர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'கூட்டொப்பந்த பேச்சுவார்த்தை இன்னும் நிறைவடையவில்லை. கடந்த காலங்களில் கூட்டொப்பந்த பேச்சுவார்த்தையின் மூலமே சம்பள உயர்வை பெற்றுகொள்ள முடிந்தது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுகொடுப்பது சாத்தியமற்றது என நான் ஏற்கனவே மறைமுகமாக கூறியிருந்தேன். முதலாளிமார் சம்மேளனத்துடனும் அரசாங்கத்துடனும் கலந்துரையாடி நியாயமான சம்பளத்தை பெற்றுகொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்' எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தை கைவிட்டு மக்கள் வழமைபோன்று தமது தொழிலை முன்னெடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago