2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

பெருந்தோட்ட மக்களுக்கு உதவ பிரிட்டன் தயார்

Kogilavani   / 2015 ஜூலை 07 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

-டி.ஷங்கீதன்

பெருந்தோட்டத்துறை மக்களுக்கு உதவுவதற்கு பிரித்தானிய அரசு தயாராகவுள்ளதென இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் லோரா டேவிப், நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் வீடமைப்புக்கான உதவிகளை பிரித்தானிய அரசால் வழங்க முடியும். இக்கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக முன்வைத்தால் பிரிட்டன் அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

'இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்துக்கு பின்பு அமைந்துள்ள அரசாங்கம் உலக நாடுகள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசாங்கத்தின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவும் அரசாங்கத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவும் உலக நாடுகள் தயாராக உள்ளன.

இலங்கையில் உள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் உதவிகளை செய்ய முடியும். உங்களுக்கு அவ்வாறான உதவிகள் தேவைப்படுகின்றது என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தினூடாக எமது அரசாங்கத்துக்கு கொண்டுவரும் பட்சத்தில் எமது பிரித்தானிய அரசாங்கம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும்' என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .