Administrator / 2015 ஜூலை 08 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

கு.புஷ்பராஜா
மரத்திலிருந்து விழுந்த காய்களை எடுத்ததாக கூறி லிந்துலை நாகசேனைக்குட்பட்ட பிரபல பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் மூவரை, இறப்பர் கையிற்றனால் கட்டிவைத்து கடுமையாக தாக்கியதாக கூறப்படும் நபரை லிந்துலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேற்படி மாணவர்கள் வழமைபோன்று பாடசாலை முடிந்து வீடு திரும்பிகொண்டிருந்த போது மரத்திலிருந்து விழுந்த காய்களை எடுப்பதற்காக சென்றுள்ளனர். இதனை அவதானித்துகொண்டிருந்த வீட்டுரிமையாளர் மேற்படி மூவரையும் இறப்பர் கையிற்றினால் கட்டிவைத்து அடித்துள்ளார்.
சிறுவர்கள் அழுதுகொண்டிருப்பதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக சிறுவர்களை மீட்டதுடன் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைதுசெய்த பொலிஸார் மேலதிக விசரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago