Kogilavani / 2015 ஜூலை 09 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சி.எம்.ரிஃபாத், மொஹொமட் ஆஸிக்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது கண்டி மாவட்டத்தில் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது.
இதற்கான வேட்புமனுவை இ.தொ.கா, கண்டி மாவட்ட செயலாளர் எச்.எம்.டீ.ஹிட்டிசேகரவிடம் நேற்று புதன்கிழமை(8) கையளித்தது.
கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 13 தேர்தல் தொகுதிகளில் 13 வேட்பாளர்களை தெரிவு செய்யும்பொருட்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில், இ.தொ.கா.வின் உறுப்பினர்களான, எஸ்.அருள்சாமி, எஸ்.செல்லமுத்து, ஜி.பெர்ணான்டோ, கே.முருகேசு, வி.எஸ். அரியநாயகம், எம்.பாலசுப்ரமணியம், எஸ்.ஞானNசுகரம், ஆர்.முத்துகிருஷ்ணன், எம்.செல்வராஜ், எஸ்.யோகநாதன், வி.ஆரோக்கியசாமி, எஸ்.விஜயகுமார், எம்.நகுலேஷ்வரன், வை.அந்தோனிப்பிள்ளை, எம்.மோகன் ஆகிய 15 வேட்பாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
1 hours ago
2 hours ago
8 hours ago
prashath Thursday, 09 July 2015 06:45 AM
entha katchi adutha mudivu thavaru, 5000 vote male kidaikathu,
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago