Sudharshini / 2015 ஜூலை 09 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
கூட்டொப்பந்த பேச்சுவார்த்தையின் நான்காம்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததனால் கூட்டு ஒப்பந்தம் சார் பிரதான தொழிற்சங்கமொன்று போராட்டத்தில் ஈடுபடுமாறு தொழிலாளர்களை கோரி வருகின்றது. இச்செயற்பாடானது தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நாடக அரங்கேற்றமாகும்' என ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
"எனவே, தோட்டத் தொழிலாளர்கள் இந்நாடகங்களில் ஈடுபட்டு ஏமாற்றமடையாமல் தமிழர் முற்போக்கு கூட்டணியுடன் கூட்டு ஒப்பந்தம் சாராத தொழிற்சங்கங்களுடனும் ஒன்றிணைந்து தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு அவர்களின் கரங்களை பலப்படுத்த வேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் சத்தியாகிரக போராட்டம் தொடர்பாக தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
"தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,000 ரூபாயாக உயர்த்தப்படவேண்டும். கூட்டு ஒப்பந்தம் என்ற தொழிலாளர்களின் அடிமைசாசனம் இரத்துச் செய்யப்படல் வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள உயர்வை முன்னிலைப்படுத்தி தோட்ட கம்பனி முகாமைத்துவங்கள், அரசாங்கம் ஆகியவற்றுடன் பேச்சுவார்தைகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். அத்துடன், தொழிலாளர்களை பலிகடாக்களாக்குவதற்கும் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கும் நான் ஒருபோதும் இடமளியேன்' என்றார்.
"தொழிலாளர்கள் என்பவர்கள் எனது தொப்புள் கொடி உறவுகளாவர். அவர்கள் வேதனைப்படுவதற்கும், துயரப்படுவதற்கும் என்னால் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது' என்றும் அவர் கூறினார்.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago