Kogilavani / 2015 ஜூலை 10 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டனிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள ராணிகாட்டுக்கான பஸ்சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு மத்திய மாகாண போக்குவரத்து அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஹட்டன் நகரிலிருந்து மஸ்கெலியா, சாமிமலை உட்பட சில தோட்டப் பகுதிகளுக்கு ஹட்டன் பஸ் டிப்போவின் அரச பஸ்கள் சேவையிலீடுப்படுத்தப்பட்டு வந்தன. இப்பஸ்சேவைகள் கடந்த பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக ஹட்டன் பஸ் டிப்போவினால் ஹட்டன், பொகவந்தலாவை, கெம்பியன் வழியாக ராணிகாட்டுக்குச் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பஸ் சேவை கடந்த ஒருவருடமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், ராணிகாட்டிலிருந்து கெம்பியன், பொகவந்தலாவை பிரதேசத்துக்கு வருகின்ற பாடசாலை மாணவர்கள் உட்பட ஏனையவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்விடயம் குறித்து மத்திய மாகாணசபை போக்குவரத்து அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் கோரியுள்ளார்.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago