Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2015 ஜூலை 13 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜனநாயக கட்சி என்பன, இன்று திங்கட்கிழமை (3) தமது வேட்பு மனுக்களை நுவரெலியா மாவட்டத்தில் தாக்கல் செய்யவுள்ளன.
எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைப்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் 8 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்;. இவர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கவுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக 3 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக 3 உறுப்பினருமாக மொத்தமாக 6 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக 3 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக மேலும் 2 சிறுபான்மை உறுப்பினர்களுமாக 5 உறுப்பினர்கள் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நடைப்பெறவுள்ள பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 534,150பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
2010ஆம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சிறுபான்மை மக்கள் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் 3 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 2 உறுப்பினர்களுமாக மொத்தமாக 5 சிறுபான்மை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago