Kogilavani / 2015 ஜூலை 13 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கிதன், ரஞ்சித் ராஜபக்ஷ
'தமிழ் முற்போக்கு கூட்டணியின் வளர்ச்சியை கண்டு இன்று சிலர் பயந்துள்ளனர். இக்கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்டதல்ல. மக்களுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியாகும். எங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி வியாபாரம் உண்டு. அதை வைத்துக்கொண்டு எங்களால் சுகபோகமாக வாழ முடியும். ஆனால், நாங்கள் அதை விரும்பவில்லை. நாம் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள். எங்களுக்கு தொழிலாளர்களின் கஷ்டங்கள் பிரச்சினைகள் அனைத்தும் நன்கு தெரியும். அவற்றை தீர்க்கவே அரசியலுக்குள் நாங்கள் பிரவேசித்தோம்' என கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
'மலையகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஓர் அரசாங்க உத்தியோகத்தர் உருவாக வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ் முற்போக்கு கூட்டணி மேற்கொள்ளும்' என்றும் அவர் தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தற்போது மலையக மக்களுக்கு பெரும் பிரச்சினையாகவுள்ள சம்பள பிரச்சினைகளை அணுகும்முறை தவறானது. சரியான தரவுகளை கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்க வேண்டும். தரவுகள் ஏதுமின்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாமல் பொருமையை இழந்து வெளியேறி விட்டார்கள். எமக்கு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதே முக்கியம். எனவே, நாம் பொருமையுடன் இருந்து இந்ந சம்பள பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.
நாம் மஹிந்த அரசாங்கத்திடம் பணம் ஏதும் வாங்கவில்லை. அதேபோல் பிரதமர் ரணிலிடமும் விலைப்போகவில்லை. நாம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்வர்கள். அவர்களுக்காக எத்தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.





5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago