Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Gavitha / 2015 ஜூலை 13 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.ஆ.கோகிலவாணி
பெருந்தோட்ட தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் மெதுவாக பணிசெய்யும் போராட்டமானது, அவர்களது மாத சம்பளத்தை பாதிக்கப் போவதாகவும் இதனால், தொழிலாளர்கள் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ளவுள்ளதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் தெரிவித்தார்.
தோட்ட தொழிலாளர்களின் மெதுவாக பணிசெய்யும் போராட்டம் தொடர்வதால், அவர்களுக்கு போராட்டத்துக்கான ஊதியம் தொடர்பில் தொடர்;புகொண்டு கேட்டபோதே, அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'மெதுவாக பணிசெய்யும் போராட்டம் காரணமாக தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 3 கிலோகிராம் வீதமே கொழுந்துகளை பறித்து வருகின்றனர். தோட்ட நிர்வாகங்களும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுத்ததால் தொழிலாளர்கள் எடுத்த கொழுந்துகள் எடுப்பாரின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது' என்றார்.
'இப்போராட்டத்தின் விளைவு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வழங்கப்படும் சம்பளத்தின்போதே தெரியவரும்.
இவ்விடயம் குறித்து முதலாளிமார் சம்மேளனத்துக்கு தெளிவுபடுத்திய போதும் அதற்கு அவர்கள் உரிய தீர்வை தர மறுப்பதாக' அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, பெருந்தோட்ட தொழிளார்களின் மெதுவாக பணிசெய்யும் போராட்டம் எட்டாவது நாளாக இன்று திங்கட்கிழமையும் தொடர்கிறது. கூட்டொப்பந்த பேச்சுவார்;த்தையின் நான்காம்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை (6) முதல் மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தை தொடர்ந்து தோட்ட நிர்வாகங்களும் தமது பணிபகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளதால் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தொழிலாளர்கள் பறிக்கும்; கொழுந்துகள் எடுப்பாரின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அவை குப்பைகளில் கொட்டப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago