Sudharshini / 2015 ஜூலை 13 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வீட்;டுத்திட்ட பயனாளிகளுக்கு தென்னிலங்;கை வியாபாரிகளால், அதிகூடிய விலைகளில் தரம் குறைந்த போலியான ஓடுகள் வழங்கப்பட்டமையால் குறிப்பிட்ட சில பயனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிரந்தர வீட்டுத் திட்டங்களுக்குரிய ஓடுகளையும் ஏனைய கட்டுமானப் பொருட்களையும் உள்ளூர் வர்த்தகர்களும் தென்னிலங்கையில் இருந்து வரும் நடமாடும் வியாபாரிகளும் வழங்கி வருகின்றனர்.
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள ஊரியான் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்களுக்குரிய கட்டுமான பொருட்களில் தென்னிலங்கையில் இருந்து வரும் வியாபாரிகளால் குறிப்பிட்ட சில வீடுகளுக்கு, தரம் குறைந்த கூரை ஓடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால், பாதிக்கப்பட்ட பயனாளிகள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த வியாபாரிகள் தரமான ஓடுகளை பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்;கவேண்டும் என தெரிவித்திருந்த போதிலும், இதுவரை குறித்த வியாபாரிகள் ஓடுகளை மாற்றிக் கொடுக்கவில்லை.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago