Kogilavani / 2015 ஜூலை 15 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
கெசினோ குற்றவாளிகளை மீட்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் களமிறங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளர் அகிலவிராஜ் காரியவசம், திங்கட்கிழமை(13) தெரிவித்தார்.
'ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர், வேட்புமனு தாக்கலுக்கு சமூகமளிக்கவில்லை. இந்தப் போட்டி சுத்தமானவர்களுக்கும் அசுத்தமானவர்களுக்கும் இடையில் நடைபெறும் போட்டியாகும்' என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
'கடந்த அரசாங்கத்தில், கடுமையான ஊழல், மோசடியில் ஈடுபட்ட அதேபோன்று கெசினோ வியாபாரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை விடுவிப்பதற்காகவே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுகின்றார்.
சுத்தமுடையவர்கள் நல்லாட்சியை வழிநடத்திச் செல்பவர்கள். மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரை சார்ந்த குழுவினரே அசுத்தமான அணியில் உள்ளனர். இதனை அறிவுள்ள மக்கள் நன்கு விளங்கிகொள்வர்.
நாங்கள் குருநாகல் மாவட்டத்தில் வெற்றிபெற்று மஹிந்தவை அவரது ஊருக்கு அனுப்பிவைப்போம் என்பதை உறுதியாக கூறிகொள்கிறேன். மஹிந்தவுக்கு குருநாகல் மாவட்டத்தில் வதிவிடம்கூட இல்லை' என்றும் அவர் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago