Sudharshini / 2015 ஜூலை 15 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
"மலையக மக்களின் எழுச்சிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பங்கு அளப்பரியது. பெருந்தோட்ட மக்களின் வாழ்வியல் மாற்றங்களுக்காக அவர்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வது முக்கிய தேவையாகவுள்ளது" என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இ.தொ.கா.வின் உபதலைவர், செந்தில் தொண்டமான் தலைமையில் பதுளை, லுணுகலையில் திங்கட்கிழமை(12) மக்கள் சந்திப்பு, நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
"நமது கடமையாகவுள்ள காணி மற்றும் வீடு, உட்கட்டமைப்பு அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுபதற்கு தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். இதற்காக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவது மிக முக்கியம்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இம்முறை சேவல் சின்னத்தில் தனித்து, பதுளை மாவட்டத்தில் போட்டியிடுகின்றது. பதுளை மாவட்டத்தில் இரண்டு தமிழ் பிரதிநித்துவங்களை பெற்றுகொடுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்" என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago