Kogilavani / 2015 ஜூலை 17 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
'முஸ்லிம்களும் இந்துக்களும் மதத்தால் வேறுப்பட்டிருந்தாலும் மொழியால் ஒன்றுப்பட்டவர்கள். நாங்கள் இந்தநாட்டின் சிறுபான்மை மக்களாக வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள். இந்த இரண்டுசமூகமும் ஒற்றுமையாக செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்'என நுவரெலியா மாநகரசபையின் உறுப்பினர் கிருஷ்ணசாமி சந்திரசேகரன் தெரிவித்தார்.
'கடந்த மஹிந்த அரசாங்கத்தில் சிறுபான்மைசமுகங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக இந்துக்களின் ஆலயங்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டன. இதன் காரணமாக மஹிந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட்டது' என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனின் ஏற்பாட்டில்,நுவரெலியாவில் புதன்கிழமை நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைதெரிவித்தார்.
இங்கு தொடர்ந்;தும் உரையாற்றியஅவர்,
'கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு பின்பு, புதிய நல்லாட்சிக்கான அரசாங்கம் உருவானது. அதற்காக சிறுபான்மை மக்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டோம்.
இந்த நாட்டில் சிறுபான்மை மக்களாகிய நாம் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் விட்டுக்கொடுப்புடனும் செயற்பட முன்வரவேண்டும். அப்படிசெயற்பட்டால் நாம் எமக்கான பல உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும். அந்த அடிப்படையிலேயே இந்த இப்தார் நிகழ்வை இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்னண் ஏற்பாடு செய்திருந்தார்' எனவும் அவர் குறிப்பிட்டார்.
40 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
7 hours ago
09 May 2026