Kogilavani / 2015 ஜூலை 17 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
இலங்கை தொழிலாளர் காங்கிஸின் மீது பெருந்தோட்டதொழிலாளர்கள் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளதுடன் நேற்று வியாழக்கிழமை பணிக்கு திருப்பியுள்ளதாகவும் அத்துடன், சில தொழிலாளர்கள் இ.தொ.கா.வுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிய வருகிறது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை புதன்கிழமை(15) எவ்வித தீர்மானமும் எட்டப்படாத நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. இப்பேச்சுவார்த்தையை பெரிதும் எதிர்பார்த்திருந்த தொழிலாளர்கள் ஏமாற்றமடைந்ததால், குறித்த தொழிற்சங்கம் மீது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
மேற்படி, தொழிற்சங்கம் முறையான சம்பள உயர்வை பெற்றுகொடுக்கவில்லை என்றும் கடந்த 9 நாட்களாக முன்னெடுக்கும் மெதுவாக பணிசெய்யும் போராட்டத்துக்கும் தமக்கு உரிய தீர்வை பெற்றகொடுக்கவில்லை என்றும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,நேற்று வியாழக்கிழமை முதல் 36 கிலோகிராம் கொழுந்தைபறிக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு இரண்டு நாள் சம்பளத்தை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
சில தோட்டங்களிலும் இ.தொ.கா.வின் உறுப்பினர்களுக்கும் ஏனைய தொழிற்சங்க உறுப்பினர்களுக்குமிடையில் வாக்குவாதம் எற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago