2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

காட்டிகொடுக்காது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்: இ.தொ.கா

Kogilavani   / 2015 ஜூலை 17 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களை காட்டிக்கொடுக்கும் எண்ணங்களை தவிர்த்து, அவர்களது தேவைகளை பூர்த்திசெய்ய முன்வருமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தில் தனித்து சேவல் சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா, இம்மாவட்டத்திலிருந்து மூன்று தமிழ் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட அலோசகர் சென்னன் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் பாண்டாரவளை மற்றும் ஹப்புத்தலை பிரதேச மக்கள் சந்திப்பு புதன்கிழமை(16) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எஸ்.சென்னன் மேலும் தெரிவித்தார்.

சிலர் அரசியல் இலாபத்துக்காக விலைபோகின்றனர். மக்களை காட்டிக்கொடுக்கின்றனர்.

இவ்வாறானவர்களிடமிருந்து மக்களை காப்பாற்றும் செயற்பாடுகளையே இ.தொ.கா முன்னெடுக்கின்றது. எதிர்வரும் நாடாளுமன்றத்தில் பதுளை மாவட்டத்தில் இ.தொ.கா அமோக வெற்றிபெற்று 3 தமிழ் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X