2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

என்னை ஊவா மாகாண முதலமைச்சராக்கும் திட்டமுள்ளது: வடிவேல் சுரேஷ்

Kogilavani   / 2015 ஜூலை 17 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா   

ஊவா மாகாண கல்வி அமைச்சராக இருந்துவரும் என்னை ஊவா மாகாண முதலமைச்சராக்கும் திட்டம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளரும் ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தின் ஹாலி-எல தேர்தல் தெகுதியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்குதொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் முதலமைச்சர்களாக தமிழரும் முஸ்லிமும் இருந்து வருகின்றனர்.     

இந்நிலையில் மலையகத்தின் ஊவா மாகாண சபையில் முதலமைச்சராக இந்தியவம்சாவளி சார் மலையகத்தவர் ஒருவர் இருக்க வேண்டியது அவசியம். இதனை எமது மாகாண முதலமைச்சரும் தலைமை வேட்பாளருமான ஹரின்பெர்ணான்டோ நிறைவேற்றி வைப்பாரென கருதுகிறேன்' என்றும் அவர் தெரிவித்தார்.

நடைபெறப்போகும் பதுளை மாவட்டத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி அமோக வெற்றிபெற்று, ஆகக் கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றம். எமது தலைமை வேடபாளரான முதலமைச்சர் ஹரின்பெர்ணான்டோ இரண்டு இலடச்சத்துக்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெறுவது உறுதி.  அந்தவகையில், ஐம்பதாயிரம் வாக்குகளை நானும் வேட்பாளர் அரவிந்தகுமாரும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்' என்றும் அவர் கூறினார்.

'முதலமைச்சர் ஹரின்பெர்ணான்டோ நாடாளுமன்றத்துக்கு சென்றதும் பொறுப்புவாய்ந்த அமைச்சொன்று அவருக்கு கிடைக்கவே செய்யும். ஐம்பதாயிரம் வாக்குகளைப் பெற்ற நான், நாடாளுமன்றத்துக்கு  தெரிவானாலும் அத்தெரிவு இரத்துச் செய்யப்பட்டு பட்டியலிள்ள மற்றுமொருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவிட்டு எனக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நடவடிக்கையானது வரலாற்றில் தடம்பதிக்கக்கூடிய சாதனையாகுமனெ கருதுகிறேன்' என்றும் அவர் கூறினார்.
மேலும், 'ஊவா மாகாண தமிழ் ஆசிரியர்களுக்கென்று தனியானதொரு வீடமைப்பு திட்டமொன்றையும் விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளேன்.

இதன்மூலம் எமது சமூக அதிபர், ஆசிரியர்கள் பெரும் நன்மையடைவது தின்னம்.

ஆசிரிய உதவியாளர்களுக்கென நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும், அவர்களது சம்பளம் 6000ரூபாய்க்;கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இச்சம்பள விடயத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எமது முதலமைச்சருடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டேன். அதனடிப்படையில், ஊவா மாகாணத்தில் நியமனங்கள் வழங்கப்பட்ட 956ஆசிரிய உதவியாளர்களுக்கு மாதம் 23,500ரூபாய் என்ற வகையில் சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளேன். ஆனால் ஏனைய மாகாணங்களில், இவ் ஆசிரிய உதவியாளர் நியமனங்களை பெற்றவர்களுக்கு, மாதம் 6000ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.'' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .