Kogilavani / 2015 ஜூலை 17 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.ரொபட் என்டன்
போலிச் சான்றிதழ்களுடன் பிரதி அதிபராக பாடசாலையொன்றில் கடமைகளை பொறுப்பேற்ற நபரை மடுல்சீமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பதுளை மடுல்சிமை தமிழ் வித்தியாலயத்தில் கடந்தவாரம் பிரதி அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்ற நபர், மூன்று தினங்கள் கடமையாற்றியுமுள்ளார்.
இவரது, நடத்தையின் மீது சந்தேகம்கொண்ட பாடசாலை அதிபர், உடனடியாக பசறை கல்வி வலையத்துக்கு அறிவித்துள்ளார். அதன் பிறகு, பசறை கல்வி வலய அதிகாரிகள் உடனடியாக பாடசாலைக்கு விஐயம்செய்து பிரதி அதிபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி நபர், பண்டாரவளையை சேர்ந்தவர் எனவும் பிரதி அதிபர் பதவிக்காக அவர் வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானதெனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இவ்விடயம் மடுல்சீமை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் மேற்படி நபரை கைதுசெய்தனர்.
இந்நபருக்கு எதிராக பண்டாரவளை பொலிஸில் உள்ளதாகவும் அதனால் குறிப்பிட்ட நபரை பண்டாரவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
39 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
7 hours ago
09 May 2026