Thipaan / 2015 ஜூலை 18 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ. 9 வீதியின் எட்டாம் கட்டை பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (18) மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய கட்டடம் ஒன்றை கட்டுவதற்காக அத்திவாரம் வெட்டிக் கொண்டிருக்கும் போது மண் மேடு சரிந்து விழுந்துள்ளதுடன் உயிரிழந்தவர் சுமார் 15 அடி ஆலத்தில் புதைந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் உயிரிழந்தவர் அலவத்துகொடை பிரதேசத்தை சேர்ந்த கே.ஜீ. விஜேரத்ன (48 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது அக்குறணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



39 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
7 hours ago
09 May 2026