Kogilavani / 2015 ஜூலை 19 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
அக்கரப்பத்தனை, பெல்மோரல் தோட்ட நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக சனிக்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் வழங்க வேண்டிய கோதுமை மா, தேயிலை தூள், சம்பள முற்பணம் மற்றும் ஏனைய சலுகைகளை வழங்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக இச்சலுகைகளை வழங்கவேண்டும் என கோரியுமே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, 1,000 ரூபாய் சம்பள உயர்வு கோரி, மெதுவாக பணிசெய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டதால் தோட்ட நிர்வாகம் இடையூறுகளை விளைவிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
பெல்மோரல் பெரிய நாகவத்தை, கிரன்லி ஆகிய தோட்டங்களை சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இவ் வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
40 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
7 hours ago
09 May 2026