Kogilavani / 2015 ஜூலை 20 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக தலையிட வேண்டும் என ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சரும் பதுளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் மகஜரொன்றை பிரதமரிடம் கையளித்துள்ளேன். தோட்ட தொழிலாளர்களை யாராவது ஏமாற்ற நினைப்பார்களாயின், அவர்களுக்கெதிராக தொழிலாளர்களை ஒன்றிணைத்து போராட்டமொன்றை மேற்கொள்ளவும் நான் தயாராகவுள்ளேன்' என்றும் அவர் தெரிவித்தார்.
சம்பள உயர்iவை முன்னிலைப்படுத்தி கூட்டு ஒப்பந்தம் செய்யும் பிரதான தொழிற்சங்கமொன்று தொழிலாளர்களை பகடைகாய்களாக்கி வருகின்றது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுகொடுக்கும் முகமாக இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் அரும்பாடுபட்டு வருகின்றார்.
நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் என்னையும் அண்ணன் அரவிந்தகுமாரையும் வெற்றிபெற செய்யவேண்டிது எமது மக்களின் தார்மீகக் கடமையாகும்'என்றார்.
40 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
7 hours ago
09 May 2026