Kogilavani / 2015 ஜூலை 20 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
கடந்த இரண்டுவாரங்களாக மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெருந்தோட்ட தொழிலாளர்களை வழமைபோன்று தமது பணிகளுக்கு திரும்புமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பணித்துள்ளது.
தேர்தல் சட்டத்துக்கு அமைவாக, சம்பள பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. எனினும், தேர்தல் முடிந்தபின் தொழிலாளர்கள் மெதுவாக பணிசெய்ததற்கான நாள் சம்பளத்தையும் ஆயிரம் ரூபாய் சம்பளத்தையும் பெற்றுகொடுப்பதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் இடம்பெறும் என இலங்கைதொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.
கொட்டகலையில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
'பெருந்தோட்ட மக்களின் தேவைகளை பூர்த்திசெய்த தொழிற்சங்கமென்றால் அது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தான். குறிப்பாக ஆசிரியர் நியமனங்கள் மற்றும் மூன்றுமுறை சம்பளபேச்சுவார்தை மூலம் நியாயமான சம்பளம் என பல தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன' என்றார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நிச்சியமாக மக்கள் எங்களை தெரிவு செய்வார்கள்.
'இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் நுவரெலியா மவாட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள் அதிகபடியான வாக்குகளால் வெற்றிபெறுவார்கள் என்பதை உறுதியாக கூற முடியும்' என்றார்.
'சம்பள உயர்வு தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது அவதூறுகளை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் விசமிகளின் செயல்பாட்டுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொறுப்பில்லை' என அவர் மேலும் தெரிவித்தார்.
39 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
7 hours ago
09 May 2026