2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

Sudharshini   / 2015 ஜூலை 20 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபைக்கு சொந்தமான ஜீப் வண்டியில் கஞ்சா போதைப்பொருளை கொண்டு சென்ற, மாகாண சபை சாரதிக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்படி சம்பவம் குறித்து சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தின் இல்லத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து ஊடகவியலாளர் மத்தியில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை, மாகாண சபை சாரதி பதவியிலிருந்து உடனடியாக நீக்குமாறு மாகாண சபையின் பிரதான செயலாளர் எச்.பி.குலரத்னவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

அத்தோடு, இச்சம்பவம் குறித்து தமக்கு அறிவித்தல் கிடைத்த உடனேயே நான் கேகாலை பொலிஸ் அதிகாரியிடம் முறைப்பாடு செய்தேன்.

கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு சகல பணிகளையும் முடித்துக் கொண்டு வாகனத்தை எனது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட சாரதியிடம் கூறினேன். பின்பு 18ஆம் திகதி காலை இச்சம்பவம் எனது காதுகளில் எட்டியது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகலருக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .