Kogilavani / 2015 ஜூலை 22 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாமிவேல் சுதர்ஷினி
ஊவா மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 23,500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு, வதந்தியெனவும் தேர்தலை நோக்காக கொண்டு இவ்வாறான ஒரு விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன், நேற்று (21) தெரிவித்தார்.
'குறிப்பிட்ட மாகாணத்திலுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கு மட்டும் இவ்வாறு மாதாந்த கொடுப்பனவு வழங்க முடியாது. மேலும், இவ்விடயம் தொடர்பில் கல்வி அமைச்சிலிருந்து எந்த ஒரு சுற்று நிரூபமும் அனுப்பி வைக்கப்படவில்லை' என்றும் அவர் தெரிவித்தார்.
'நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள இந்நிலையில், இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளமையானது தேர்தலை நோக்காக கொண்டு மாத்திரமே. இந்த செய்தியில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாது.
மேலும், ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்றுள்ளவர்கள், வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதுக்கு அமைய பயிற்சிகளை நிறைவு செய்த பின்னர், அவர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும். இவ்விடயம் தொடர்பில் தேர்;தலுக்கு பின்னரே எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். தேர்தல் விதிமுறைக்கமைய தற்போது நியமனங்கள் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்க முடியாது' என்றார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago