Kogilavani / 2015 ஜூலை 23 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
'தோட்டங்கள் தோறும் பல தொழிற்சங்கங்கள் இருந்தபோதும் தோட்ட பெண்களை முன்னேற்ற வழிவிடுவதில்லை' என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கண்டி மாவட்ட வேட்பாளர் திருமதி அனுஷா இத்தமல்கொட தெரிவித்தார்.
'பெண்களின் வாழ்வுக்கு அவர்களது, தொழிலாளர் அமைப்புகளே தடையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கண்டி, கலஹா பகுதியில் இடம்பெற்ற கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'நான், பெருந்தோட்டப் பிரதேசமான கலஹாவைச் சேர்ந்தவள். நீண்டகாலமாக பெருந்தோட்ட மக்களோடு இணைந்து வாழ்ந்து வருகின்றேன். பெருந்தோட்டப் பகுதி மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் நன்கு அறிவேன். எனவே, நாடாளுமன்றத்துக்கு நான் தெரிவு செய்யப்படுமிடத்து அவர்களது உரிமைகளுக்காக நாடாளுமன்றில் குரல் எழுப்புவேன்' என்றும் அவர் தெரிவித்தார்.
'பெருந்தோட்ட பகுதி பெண்களும் கிராமபுறப் பெண்களும் இன்று சகல துறைகளிலும் பின்தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் குரல் கொடுக்க நாடாளுமன்றத்தில் யாரும் இல்லை. ஏனெனில், உயர்தர வகுப்புக்களில் உள்ள பெண்கள்தான் நாடாளுமன்றில் இருக்கின்றனர்.
'நாடாளுமன்றத்தில் உள்ள பெண் உறுப்பினர்கள், நலிவடைந்த தோட்டபுற மற்றும் கிராம புற பெண்களுக்காக இதுவரை குரல் எழுப்பியதில்லை. எமது நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பான, பெருந்தோடத்துறை மக்களின் உரிமைகள் 200 வருடங்களாக புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. இவற்றை நிவர்த்தி செய்யவே நான் புறப்பட்டுள்ளேன்' என்றும் அவர் தெரிவித்தார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago