Sudharshini / 2015 ஜூலை 23 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
கினிகத்தேனை பொலிஸ் பிரிவுகுட்பட்ட பிளக்வோட்டர் தோட்டத்தின் கீழ் பிரிவிலுள்ள ஓடையிலிருந்து பெண் சிசுவின் சடலத்தை பொலிஸார் இன்று (23) மீட்டுள்ளனர்.
பிரதேசவாசிகள் சிலர் சிசுவின் சடலத்தை கண்டு கினிகத்தேனை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியதையடுத்து, பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.
மேலும், தாய் சிசுவை பிரசவித்து ஓடையில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக குறிப்பிட்டனர்.
சடலம் மரண விசாரணைகளின் பின், பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

28 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
3 hours ago