Sudharshini / 2015 ஓகஸ்ட் 02 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமசந்திரன்
ஹட்டன், காசல்ரீயிலுள்ள மதுபான விற்பனை நிலையத்தில் 5,000 ரூபாய் போலி நாணயத்தாளை கொடுத்து மதுபானத்தை கொள்வனவு செய்த நபரொருவரை, பொலிஸார் சனிக்கிழமை (1) கைதுசெய்துள்ளனர்.
ஹட்டன், எபோட்சிலி பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். போலி நாணயத்தை கொடுத்து மதுபானத்தை கொள்வனவு செய்வதை அறிந்த விற்பனையாளர், அந்நபரை தடுத்து வைத்ததுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.
மதுபான விற்பனை நிலையத்துக்கு விரைந்த பொலிஸார், சந்தேகநபரை கைதுசெய்ததுடன், போலி நாணயதாளையும் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பான மேலதி விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .