2026 மே 07, வியாழக்கிழமை

வாகன உதிரிப்பாகங்களை திருடியர் கைது

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

வாகன உதிரிப்பாகங்களை திருடி விற்பனை செய்துவந்த நபரை அலவத்துகொடை பொலிஸார் புதன்கிழமை (05) அதிகாலை கைதுசெய்துள்ளனர்.

பேருவளை, தர்காவை சேர்ந்த மேற்படிநபர், சில தினங்களுக்கு முன் அக்குறணையில் இரு வாகனங்களின் உதிரிப்பாகங்களை திருடி சென்றுள்ளதுடன் அவற்றை மாவனெல்லையில் விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி சந்தேகநபர் அக்குறணை நகரில் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து, பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்வதற்காக சென்றுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர், பொலிஸாரை கண்டு ஆற்றில் குதித்துள்ளார்.  ஆற்றிலிருந்து அவரை உயிருடன் மீட்ட பொலிஸார், பின்னர்  கைதுசெய்துள்ளனர்.

இவர் ஏற்கனவே திருடி விற்பனைசெய்த வாகன உதிரிப்பாகங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .