Sudharshini / 2015 ஓகஸ்ட் 06 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வந்தால் சிறும்பான்மை மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கநேரிடும். எனவே, மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும். வெற்றிலை சின்னத்துக்கு இடும் ஒவ்வொரு புள்ளடியும் சிறுபான்மை மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'யானை சின்னத்தை வெற்றிபெற செய்வதன் மூலம் எதிர்காலத்தில் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுக்கமுடியும்.
தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்ந்தும் இழுபறி நிலையிலே காணப்படுகின்றது. தேர்தல் நிறைவடைந்த பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலையீட்டினூடாக உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தைப் பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுப்பேன். தேர்தல் காலங்களில் பலர் உங்களை நாடிவருவார்கள். எனவே, சிந்தித்து வாக்களியுங்கள்' என்றார்.
28 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
3 hours ago