Sudharshini / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
அரசன் என்ற ஆணவம் கொண்டு; பதவியதிகாரத்தை தவறாக பயன்படுத்திய மஹிந்தவை, கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்கள் புள்ளடியிட்டு வீட்டுக்கு அனுப்பினர். அதற்காக இந்த நாட்டின் சாதாரண ஏழை மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என ஐக்கிய தேசியக்கட்சியின்; நுவரெலியா மாவட்ட வேட்பாளர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.
நோர்வூட் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்த தெரிவித்த அவர்,
சாதாரணமாக ஆறு மாதங்களில் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்;படுத்தி விட முடியாது. ஆனாலும், இன்று மக்கள் பச்சை நிறத்தை ஆதரிக்கின்றார்கள். குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க கூடாதென மக்கள் சரியான நேரத்தில் நல்லதொரு முடிவு எடுத்தார்கள். மேலும், அரசியல்வாதிகளுக்கும்; நல்லதொரு பாடமாக அது அமைந்துள்ளது. அதனால் தான் ஜனவரி; 8ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் பெறுமதியான புள்ளடி மூலம் தகுந்த பாடத்ததை புகட்டி மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பினார்கள்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. அலட்சியப்படுத்தவும் கூடாது. ஆனால், முன்னாள் ஜனாதிபதி அதனையே மீண்டும் மீண்டும் செய்தார். அதுவே, அவரின் இன்றைய நிலைமைக்கு காரணமாகியுள்ளது.
கடந்த தேர்தலில் எப்படி நீங்கள் சரியான முடிவை எடுத்தீர்களோ, அதேபோன்று இந்த தேர்தலிலும் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன். என்னை நீங்கள் வாக்களித்து தெரிவு செய்தால் தோட்ட மக்களுக்கு தேவைப்படுகின்ற அபிவிருத்திகளை செய்வேன் என அவர் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago