Kogilavani / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்பு மலையக மக்களின் தனிவீட்டுத்திட்டத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேடபாளர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிபீடம் ஏற்றியதில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அதேபோல பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியும் மலையக இந்திய வம்சாவளி மக்களின் கைகளிலேயே உள்ளது என்றும் அவர் கூறினார்.
நுவரெலியா, இராகலையில் நேற்று வியாழக்கிழமை (6) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'கடந்த ஜனாதிபதி தேர்தலில், மஹிந்தவை தோற்கடித்து மைத்திரியை ஆட்சிக்கு கொண்டு வந்தோம். ஆனால், இன்று பலர் மைத்திரியின் படத்தை காட்டி வாக்கு கேட்கின்றனர். இதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மலையக மக்களுக்கான தனி வீட்டுத் திட்டத்துக்கு எனது நிதியில் ஒரு பகுதியை ஒதுக்கத் தீர்மானித்துள்ளேன்' என அவர் மேலும் கூறினார்.


3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago